கடவுச்சீட்டு பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு


முன்பதிவு முறைப்படி கடவுச் சீட்டுகளை வழங்குவது இடைநிறுத்தப்பட்டதால், பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலக வளாகத்தை சுற்றி மூன்று நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடவுச் சீட்டுகளைப் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ வருபவர்கள் மூன்று நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுதிகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யும் முறையின்படி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன, ஆனால் அந்த முறை ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வரிசை முறைப்படி கட்டுப்பாடுகளுடன் தினசரி கடவுச்சீட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி தினமும் கடவுச்சீட்டுகள் பெற சுமார் ஆறாயிரம் பேர் பேர் வரை வரிசையில் காத்திருக்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரிசைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, பிபில, தெரணியகல, செவனகல, இரத்தினபுரி உட்பட நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் நேற்று மாலை குடிவரவு திணைக்கள அலுவலகத்திற்கு வெளியே மக்கள் வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவிக்கையில்இந்த வரிசை பிரச்சினை நேற்று (17) முடிவடைந்தது. நேற்று முன்பதிவு செய்த கடைசி பிரிவில் இருந்த 1800 பேருக்கு கடவுச்சீட்டுகளை வழங்கினோம். கடந்த சில நாட்களாக முன்பதிவு செய்தவர்களும், முன்பதிவு செய்யாமல் சுமார் நான்காயிரம் பேரும் வந்ததால், வரிசைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலை நீக்கி, எளிதாக கடவுச்சீட்டுகளை வழங்கும் அமைப்பை உருவாக்கி வருகிறோம். தற்போது ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 2500 கடவுச்சீட்டுகளை வழங்குகிறோம். மேலும், அவசர தேவைக்கு வருபவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதாகவும் அவர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.