முன்பள்ளி குழந்தைகளுக்கு புதிய பிஸ்கட்!
சிறு குழந்தைகளின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் முன்பள்ளிச் சிறார்களுக்கு உயர் போஷாக்குடன் கூடிய பிஸ்கட் வகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த மாதம் முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக