வவுனியாவில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு 

வாகனத்தின் சாரதி தப்பியோட்டம்

வவுனியாவில் விசேட அதிரடிப்படை சிப்பாய் ஒருவரை மோதிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற வண்டியொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா, ஈச்சங்குளம், கல்மடு, சாளம்பன் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், சட்டவிரோத மர வியாபாரம் ஒன்றினை சோதனையிடச் சென்ற போது சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்துக் கொண்டிருந்த வாகனமொன்றை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். எனினும் குறித்த வாகனம் விசேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றுள்ளது.

தப்பிச் செல்ல முயன்ற வாகனத்தின் மீது விசேட அதிரடிப்படை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி, தடுத்து நிறுத்தியதாகவும், அதில் ஏழு பெரிய அளவிலான முதிரை மரக் குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.