மட்டக்களப்பு தலைமை நிலைய பொலிஸார் விடுக்கும் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்
நாட்டில் அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல்கள் மிகவும் அதிகரித்துள்ளது. எனவே அதிபர் ஆகிய தாங்கள் உரிய வகுப்பாசிரியர்கள் மூலம் அல்லது காலை ஒன்றுகூடலில் கீழ்வரும் அறிவுறுத்தல்களை மாணவர்களுக்கு வழங்கவும்.
✓ பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீடுகளுக்கு உடன் செல்ல பணிப்புரை வழங்கவும்.
✓ இனந் தெரியாதவர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுத்தாலும் வாங்க வேண்டாம் என பணிப்புரை வழங்கவும்.
✓ இனந் தெரியாதவர்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகிறோம் என பணித்தால் வாகனங்களில் ஏற வேண்டாம் என பணிப்புரை வழங்கவும்.
✓ மாணவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் அத்துடன் மேற்படி விடயங்களை பெற்றோருக்கும் தெரியப்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக