ஆசிரியர்களாக பணியாற்றும் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

 ஆசிரியர்களாக பணியாற்றும் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக மீண்டும் போட்டிப் பரீட்சை நடத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பத்மன் பி.சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் நேற்று(24) குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனு மீதான ஆட்சேபனையை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலத்திற்குள் ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தாமதித்து சமர்ப்பித்தமையால் எதிரான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க காலம் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கின் சில மனுக்கள் மீதான ஆட்சேபனைகள் இதுவரை மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க மேலும் 02 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.