தெஹிவளை - கௌஸிய்யாஹ்வின்
முப்பெரும் விழா

   தெஹிவளை - அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ் அரபு பயிற்சிக் கல்லூரி மற்றும் இஸ்லாமிய நூலகத்தின் வெள்ளி விழா, 11 ஆவது பட்டமளிப்பு விழா, 18 ஆவது தலைப்பாகை சூட்டு விழா ஆகிய சிறப்பு நிகழ்வுகள் உள்ளடங்கிய முப்பெரும் விழா, (13) சனிக்கிழமை மாலை 3.45 மணி முதல் அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ் அரபுக் கல்லூரி மண்டபத்திலும், (14) ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் தெஹிவளை - ஈகல் லேக் சைட் பாதுகாப்புப் படையினரின் வரவேற்பு மண்டபத்திலும் ( Dehiwala - Eagles' Lakeside Banquet & Convention Hall ) வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளன.
   இச்சிறப்பு நிகழ்வில், பிரதம அதிதிகளாக அஸ்ஸெய்யித் நகீப் மௌலானா, அஸ்ஸெய்யித் நஜீப் மௌலானா மற்றும் கௌரவ அதிதிகளாக அல் ஜாமிஅதுல் கௌஸிய்யாஹ் தலைவர் அல்ஹாஜ் எம்.எச். ஹாஜா ஹுஸைன், அஸ்ஸெய்யித் ஏ.ஐ. அனீஸ் பூக்கோயாத் தங்கள், அஸ்ஸெய்யித் ஏ.ஐ. உவைஸ் பூக்கோயாத் தங்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
   இந்தியா - தமிழ்நாடு, ஜாமிஆ அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபுக் கல்லூரியின் துணை முதல்வர் மௌலவி அஃப்ழலுல் உலமா ஜே.எம். ஜைனுல் ஆபிதீன் (மஹ்ழரி) சிறப்புரை நிகழ்த்தும் இச்சிறப்பு நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக ஸாதாத்துமார்கள், கௌஸிய்யாஹ் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், முரீதீன்கள், முஹிப்பீன்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 
   அன்றைய தினம், (2019) ஆலிம்கள் 6 பேரும், (2021) ஆலிம்கள் 15 பேரும், (2022) ஆலிம்கள் 16 பேரும், (2020) ஹாஃபிழ்கள் 4 பேரும், (2021) ஹாஃபிழ்கள் 6 பேரும், (2022) ஹாஃபிழ்கள் 11 பேரும், மௌலவி மற்றும் ஹாஃபிழ் பட்டங்களைப் பெறவிருப்பதோடு, மாணவர்கள் 6 பேரும் தலைப்பாகை சூடி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
   இதேவேளை, குறித்த இளம் ஆலிம்களும் ஹாஃபிழ்களும், கல்லூரி அதிபர் அல் ஹாஃபிழ் மௌலவி எம்.எஸ். ரிப்பத் அஹ்மத் - பீ.ஏ., (பாஸில் - ஸகாபி), உப அதிபர் மௌலவி எம். ஆர்.எம். முஹம்மத் றிழ்வான் (கௌஸி), ஹிஃப்ழ் பிரிவு பொறுப்பாளர் - அல் ஹாஃபிழ் மௌலவி எஸ். முஹம்மத் அக்பர் (கௌஸி), ஹிஃப்ழ் பிரிவு - அல் ஹாஃபிழ் மௌலவி ஜே.எம். தானிஷ் (கௌஸி) உள்ளிட்ட கல்லூரி போதனாசிரியர்களினால் வாழ்த்தி மகிழ்விக்கப்படவுள்ளமையும் விஷேட அம்சமாகும்.

( மினுவாங்கொடை நிருபர் )
( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.