இன்சுலின் கண்டுபிடிக்கமுன் நீரிழிவு நோய் என்பது மெல்ல கொல்லும் விஷமாகவும் மரண தண்டனைக்கு ஒப்பாகவும் இருந்தது. 
எவ்வளவு உணவு கட்டுப்பாடு செய்தும்,
 போசாக்கின்மை, 
மெலிவடைதல், 
பல அங்கங்கள் செயலிழத்தல் 
போன்ற பல குறைபாடுகளுடன் இறப்பை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது.
1920/21 காலப்பகுதியில் Surgeon Dr Frederick Banting மற்றும் அவரது மருத்துவ மாணவன் Charles Best இணைந்து கண்டுபிடித்த Insulin நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் ஒரு மயில் கல்லாக அமைந்தது. 
இதனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், நோயாளர்களின் வாழ்நாளை நீடிக்கவும் முடிந்தது.
இதனால் இவ்விருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
அமெரிக்க CDCயின் ஆய்வின்படி 12% ஆன நீரிழிவு நோயாளர்கள் இன்சுலினை பயன்படுத்துகின்றனர்.
மனிதனின் உடலில் இயற்கையாக சுரக்கப்படும் இன்சுலினே உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. 
நீரிழிவு நோயாளிகளுக்கு இதற்கு மேலதிகமாக (ஆரம்பத்தில் விலங்குகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டும் பின்னர்) Recombinant DNA Technology மூலம் Synthetic முறையில் தயாரிக்கப்பட்டு ஊசி மருந்தாக இன்சுலின் வழங்கப்படுகிறது.
ஒரு நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் அளவானது:
✅ அவரது இரத்த குளுக்கோஸ் அளவின் கட்டுப்பாடு (FBS, PPBS)
✅ நீண்டகால Sugar Control (HBA1C)
✅ உட்கள்ளும் மாச்சத்து  உணவின் அளவு 
✅ உடற்பயிற்சி செய்தல்
✅ Insulin Sensitivity
என்பவற்றை கொண்டு வைத்தியர் பரிந்துரை செய்வார்.
இன்சுலினானது 
❤️ Regular/ short Acting
❤️ Intermediate Acting
❤️ Long Acting 
என பல வகைகளில் பரிந்துரைக்கப்படும்.
தேவையான/ பரிந்துரைக்கப்படும் அளவைவிட அதிகமாக Insulin ஊசி எடுத்துக் கொள்வது #Insulin_Overdose எனப்படும்.
இது தற்செயலாக பின்வரும் நிலைமைகளில் நிகழலாம்.
🛑 01. ஊசி ஒன்றை போட்டபின் அதனை மறந்து சிறிது நேரத்துக்குள்ளேயே இன்னொரு ஊசியை போட்டுக் கொள்ளல்.
🛑 02. தற்செயலாக அதிக அளவு மருந்தை ஏற்றிக்கொள்ளல். உதாரணமாக புதிய ஒருவர் மூலம் போடும்போது.
🛑 03. வித்தியாசமான புதிய இன்சுலின் வகையை சரியான அளவின்றி போட்டுக் கொள்ளல்.
🛑 04. உணவு வேளை தவறி அல்லது இன்சுலினை போட்டுக்கொண்டு உணவு வேளையை தவிர்த்தல்.
🛑 05. இன்சுலின் அளவை குறைக்காமல் அதிக அளவு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடல்.
🛑 06. தவறுதலாக வேறு ஒருவரின் மருந்து அளவை ஏற்றிக் கொள்ளல்.
🛑 07. காலையில் எடுக்க வேண்டிய இன்சுலின் அளவை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளல்.
(பொதுவாக காலை நேர இன்சுலின் அளவு இரவு நேரத்தை விட அதிகமாக இருக்கும். ஏனெனில் காலை நேரத்தில் எடுத்துக் கொண்ட பின் சாப்பிட நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆனால் இரவு நேரம் தூங்கி விடுவதால் அதிக Dose தேவையில்லை.
⁉️ Insulin Overdoseஇன் அறிகுறிகள்:
அதிகளவான இன்சுலின் இரத்த குழாய்களுக்கு செல்லும்போது அது அதிக அளவான குளுக்கோசை இரத்தத்திலிருந்து கலங்களுக்குள் அகத்துறிஞ்சும். இதனால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறையும் இந்நிலைமையை Hypoglycemia என்பர்.
உடல் இயக்கத்திற்கு இரத்தத்தில் தேவையான அளவு குளுக்கோஸ் இருக்க வேண்டும். அதாவது உடல் இரக்கத்தின் எரிபொருள் குளுக்கோஸ். அது குறைவடையும்போது Hypoglycemia ஏற்படும்.
இலேசான (Mild) Hypoglycemiaவின் அறிகுறிகளாக;
🛑 வியர்த்தல்
உடல் குளிர்வடைதல் - Chills
🛑 தலைச்சுற்று மற்றும் மயக்க நிலை 
Lightheadedness or dizziness
🛑 உளருதல் - mild confusion
🛑 பய உணர்வு - anxiety/ nervousness
🛑 நடுக்கம் - shakiness
🛑 அதிக இதயத்துடிப்பு
பசி
🛑 எரிச்சலடைதல் - irritability
🛑 பார்வை மங்கலடைதல்: Blurred vision
போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இவை mild to moderate Hypoglycemiaவின் அறிகுறிகளாகும்.
⁉️ உடனடி சிகிச்சை;
இவ்வாறான அறிகுறிகள் தோன்றும் போது உடனடியாக உடலினுள் அகத்துறிஞ்சக் கூடிய காபோவைதரேட் கொண்ட உணவு 15g எடுத்துக் கொள்ள வேண்டும்.
💞 குளுக்கோஸ் தூள்
💞 சீனி
💞 திராட்சை 
💞 பழரசம் - fruit juice
💞 Toffee 
ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் 15 நிமிட நேரத்தில் உடல் நிலை வழமைக்கு திரும்ப ஆரம்பிக்கும்.
அதாவது Glucometer வாசிப்பு 70mg/l என்ற அளவைவிட அதிகமாக வர வேண்டும்.
இதனாலே இன்சுலின் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு அவசரத்துக்கு உதவக்கூடிய மேலுள்ள உணவுகளை வைத்துக்கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🛑🛑🛑 இன்சுலின் ஊசி உயிரை கொல்லுமா⁉️
அதிகளவான இன்சுலினை ஊசி மூலம் செலுத்தும் போது
Severe Hypoglycemia எனும் நிலை ஏற்படும்.
இதனை #Diabetic_Shock / Insulin Shock என்பர்.
இதன் அறிகுறிகளாக:
🛑🛑 மயக்கம் / சுயநினைவை இழத்தல்
 Unconsciousness
🛑🛑 வலிப்பு
🛑🛑 Come ஏற்படும்.
உடனடி சிகிச்சை வழங்காதவிடத்து மரணமும் ஏற்படும்.
ஒருவர் இன்சுலின் ஊசி பெற்ற பிறகு மயக்க நிலையை அடைந்தால் அது ஒரு Medical Emergency.
, உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்.
அங்கு இதற்கு மாற்றீடான Glucagon மருந்து மற்றும்  Saline மூலம் Glucose வழங்கி அவசர சிகிச்சைகள் வழங்கப்படும்.
🛑🛑🛑வேண்டுமென்றே அதிகளவு இன்சுலின் ஏற்றிக் #கொள்ளல்/ #கொல்லல்
2009இல் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட காலம் நீரிழிவு நோயினால் அவதியுறுவோர் Depression மற்றும் தற்*கொ*லை எண்ணங்களுக்கு ஆளாகி தனக்கு தானே அதிகளவு ஏற்றிக் #கொள்ளல் பதிவாகியுள்ளது.
Wonder of Asiaவில் அதிகளவு ஏற்றிக் #கொல்லல் எனும் சம்பவமும் விசாரணையில் உள்ளது.
(Dr. Ziyad Aia)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.