#தரப்படுத்தலில்_ஹப்சான்_முதலிடம்*
அகில இலங்கை ரீதியாக Point system வலையமைப்பின் ஊடாக நடந்து வரும் 25 வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்று தொடரில் Kahatowita Badriyans அணி பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட அணிகளுக்கான
தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்திருந்தது.
இதன் தொடராக இன்று வெளியிடப்பட்டுள்ள பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் Kahatowita Badriyans அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் Hafsan முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். நான்கு புள்ளிகள் பெற்றுள்ள இவர் Homagama அணி வீரர் ஒருவருடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் Kahatowita JF அணிக்காக விளையாடி வரும் இவர் முன்னாள் Latest கிரிக்கெட் கழக உறுப்பினர் Rishan ஆசிரியரின் மகன் என்பது நினைவு கூறத்தக்க விடயம்.
இவ் அணியில் விளையாடும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் பல அணிகளாக பிரிந்து விளையாடினாலும் அகில இலங்கை ரீதியான போட்டிகளுக்கு Kahatowita Badriyans என்ற பெயரில் விளையாடி தமக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக