120 பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்த நபரருக்கு ஆயுள் தண்டனை!
 

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்த காசி (27) என்ற இளைஞர், 2020 ஆம் ஆண்டு நூறுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.
அவர் ஆறு வழக்குகள் பதியப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. அவரிடம் கைப்பற்றப்பட்ட மடிக்கணினி மற்றும் செல்போனில் 400 ஆபாச வீடியோக்கள், 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சி.பி.சி.ஐ.டி கூறியுள்ளது.
காசியால் பாதிக்கப்பட்ட 120 பெண்களில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், காசி மீதான வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசிக்கு ரூ.1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காசி மீது, ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டது பின் நிரூபிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.