கனடாவில் பஸ்ஸூடன் ட்ரக் மோதி விபத்து; 15 பேர் பலி, 10 பேர் காயம்

Canada: கனடாவின் மனிடோபா (Manitoba) மாகாணத்தில் சிறிய ரக பஸ் மீது ட்ரக் மோதி விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்தினால் பஸ் தீப்பற்றி எரிந்துள்ளது. 

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனடாவில் இவ்வாண்டில் இடம்பெற்ற மிக மோசமான விபத்தாக இது பதிவாகியுள்ளது. 

மனிடோபாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள  Carberry நகருக்கு அருகில், Winnipeg-இல் இருந்து மேற்கில் 170 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெற்ற இந்த விபத்தில், 15 பேர் காயமடைந்துள்ளனர். 

Carberry நகரில் உள்ள casino ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தவர்களே விபத்தை எதிர்கொண்டுள்ளனர். இதன்போது பஸ்ஸில் 25 பேர் பயணித்துள்ளனர். 

விபத்தை எதிர்கொண்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் உயிர் பிழைத்துள்ளனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 
விபத்தில் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை அவர் தெரிவித்துள்ளார். 


 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.