நானுஓயாவில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து மூச்சக்கர வண்டி விபத்து - ஐவர்  படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நுவரெலியா - தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிலாரண்டன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் எதிர் திசைக்கு சென்று எல்லைக் கல்லில் மோதுண்டு 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரும்  படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.