ஹஜ் யாத்திரைக்காக திரண்டுள்ள 1.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள்!


இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை கோவிட்-19 கட்டுப்பாடுகளின்றி முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. யாத்திரைக்காக 1.5 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் சவுதி அரேபியா சென்றுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய சமய நிகழ்வாகக் கருதப்படும் ஹஜ் யாத்திரை நாளை (26 ஜுன்) அதிகாரபூர்வமாகத் தொடங்கவிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள் வெள்ளை அங்கியணிந்து புனித யாத்திரைக்கான முதல் சடங்கை மேற்கொள்வர். பெரிய மசூதியின் மையப் பகுதியிலிருக்கும் புனித இடமான காபாவைச் சுற்றிவலம் வருவதும் அதில் ஒன்று.

ஆயிரக்கணக்கான சவுதி அரேபியக் குடியிருப்பாளர்களும் அந்தச் சடங்கில் கலந்துகொள்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.குற்றச்செயல்களைத் தடுக்கவும் யாத்திரீகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.