➡️ பாராளுமன்ற நிதிக்குழு தலைவர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சபாநாயகர் எடுத்த நிலைப்பாட்டினால் பாராளுமன்றத்தின் கௌரவம் காக்கப்பட்டது...
➡️ எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டாமல், நிதிக்குழுவின் புதிய தலைவரை அவரது பதவியில் தொடர இடமளிக்க வேண்டும்.
➡️ பாராளுமன்ற நிதிக்குழுத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தருவதாக ஆரம்பம் முதலே அரசு கூறியது...
➡️ 17 பாராளுமன்றக் குழுக்களில் 8 பேரின் தலைவர் பதவிகள் எதிர்க்கட்சிகளுக்கு...
➡️ திரு ஹர்ஷ டி சில்வா அவர்களின் பணியைத் தொடர அனுமதிக்கிறோம்...
                                              - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
பாராளுமன்ற நிதிக்குழு தலைவர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் எடுத்த நிலைப்பாட்டினால் பாராளுமன்றத்தின் கௌரவம் காக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தத் தருணத்தில் எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டாமல், நிதிக்குழுவின் புதிய தலைவரை அவரது பதவியில் தொடர இடமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் இடையில் உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதில் சபாநாயகரும் தலையிட்டார்.

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல (ஐ.ம.ச.) - நிதிக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல மாதங்களாக கூறி வருகின்றோம். இறுதியாக, கௌரவ ஜனாதிபதி அவர்கள் வந்து ஹர்ஷ டி சில்வாவை நியமனம் செய்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன - சரி பாராளுமன்ற உறுப்பினரே, அதனைக் கழுவிக் கழுவி சேற்றில் வீச வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அது முடிந்துவிட்டது.



எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல (ஐ.ம.ச.) - உங்களிடமிருந்து எங்களுக்கு ஏதாவது செய்ய முடியாவிட்டால் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. நிதிக் குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு சொந்தமானது. அது கொடுக்கப்படவில்லை. போராட்டத்தின் போது கொஞ்சம் கொடுக்கப்பட்டது. பின்னர் திரும்ப எடுக்கப்பட்டது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை காக்க வேண்டியவர் நீங்கள்.  அரசனின் பக்கம் இல்லாமல்  எங்கள் பக்கம் எடுங்கள்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன - நான் யாருடைய பக்கமும் நிற்கவில்லை. அந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானது. பாராளுமன்ற உறுப்பினர்களே முடிவெடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல (ஐ.ம.ச) - சபாநாயகரே இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் ஆளும் கட்சிக்கு அடிபணிந்து நீங்கள் இதனை எமக்கு வழங்கவில்லை. பாராளுமன்றத்தில் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாவிட்டால் ஜனாதிபதியிடம் சென்று சொல்லுங்கள் என்றீர்கள்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன - நல்லபடியாக முடிந்தால் அவ்வளவுதான்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) - கௌரவ சபாநாயகர் அவர்களே, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் தவறான விளக்கம் அளித்துள்ளார். திரு.ஹர்ஷ டி சில்வாவை வாழ்த்துகிறோம்.இந்த விடயத்தில் சபாநாயகர் எடுத்த நிலைப்பாட்டினால் பாராளுமன்றத்தின் கௌரவம் காப்பாற்றப்பட்டது. நிதிக் குழுவின் தலைவரை நியமிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு உண்டு. நாங்கள் அனைவரும் தேர்வுக் குழுவில் அமர்ந்துள்ளோம். இதை எதிர்கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கு கூறப்படும் சதியை உருவாக்கியது எதிர்க்கட்சிதான். இதனை திரு.மயந்த திசாநாயக்க ஏற்றுக்கொண்டார். மேலும், 17 நாடாளுமன்றக் குழுக்களில் 8 குழுக்களுக்கு தலைமை பதவிகளும் அவர்களுக்கே எழங்கப்பட்டது. அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு பயணத்தை மேற்கொள்ள ஜனாதிபதி முயற்சிக்கிறார். ஆனால் இங்கு ஜனாதிபதி நிதி அமைச்சராகவே தலையிட்டார் ஜனாதிபதியாக அல்ல. இப்போது இதைப் படித்துப் படித்து  இருக்காமல் திரு.ஹர்ஷ டி சில்வா தனது பணியைத் தொடரட்டும். அதைச் செய்யாமல் ஆளும்கட்சி உறுப்பினர்கள் அந்நியப்பட்டு வேலை செய்யாமல் விடுவார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் நாங்கள் ஒரு குழுவாக திரு ஹர்ஷ டி சில்வாவை அவரது பணியைத் தொடர அனுமதிக்கிறோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.