195 நாடுகளின் தலைநகர் பெயர்களை கூறி அசத்தும் சிறுவனின் சாதனையை வெளிப்படுத்தும் வாகனப்பேரணி

உலக நாடுகளில் 195 நாடுகளின் தலைநகரங்களை 04 நிமிடங்களில் உலக வரை படத்தில் தொட்டு காண்பித்து சாதனை படைத்த 04 வயது சிறுவனின் மாபெரும்  வாகனப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் 4 நிமிடங்கள் 16 நொடிகளுக்குள் கூறி புதிய சோழன் உலக சாதனையை படைத்த சிறுவனின் வெற்றியை கொண்டாடும் நோக்கில் இவ் வாகனப்பேரணி இடம்பெற்றது.

சிறுவனின் ஞாபக திறனை பாராட்டி பன்னாட்டுச் சோழன் உலக சாதனை புத்த நிறுவனத்தின் சிறுவனின் முயற்சியை முறைப்படி நேரடியாக பரிசோதித்து உலக சாதனையாக அங்கீகாரம் வழங்கப்பட்டது .

நுவரெலியா - உடபுசல்லா பிரதான வீதியில் ஆரம்பித்து நுவரெலியா பிரதான நகர வீதி வழியாக குயின் எலிசபெத் , கண்டி பிரதான வீதி , பழையக்கடை வீதி போன்ற வீதிகளினுடாக சென்று மீண்டும் பிரதான வீதியூடாக சென்று வாகன பேரணி நிறைவு பெற்றது.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.