All Island Service Exam
நாடாளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத்தரப் பதவிகளுக்கு அட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைகள் - 2021 

நாடாளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத்தரப் பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைகளில் 1990 களுக்குப் பின்னர் தமிழ் மொழி மூலமான பரீட்சார்த்திகள் மிக அரிதாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இலங்கையின் அனைத்து நிறைவேற்றுத்தர சேவைப் பதவிகளில் தமிழ் மொழி உத்தியோகத்தர்களின் அளவு மூலமான மிகக் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலைமை தொடருமேயானால் தமிழ் பேசும் மக்கள் நிர்வாக ரீதியில் பல்வேறு பாதிப்புக்களையும் இழப்புக்களையும் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடலாம். 

எமது பிரதேசத்தின் அபிவிருத்தி எதிர்கால திட்டமிடல் என்பவற்றை திட்டமிட்டு நிறைவேற்றும் தகுதியும், தரமும் இப்பதவிகளிலேயே தங்கியிருக்கும். எனவே காரணங்கள் கூறி கதையளந்து திரிவதை விட திட்டமிட்டு பரீட்சைக்குத் தயாராகி பரீட்சையில் சித்தியடைவதன் மூலம் தமிழ் மூல அடைவுகளை கூட்டிக் கொள்வதோடு எமது மக்களுக்கு சேவை செய்தவற்கான வாய்ப்பையும் பெற்றுக் கொள்ள முடியும். 

எதிர்வரும் ஜுலை மாதம் 2023 நாடாளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத்தரப் பதவிகளுக்கு அட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைகள் நடார்த்த பரீட்சை தினைக்களம் அறிவித்துள்ளது. அதற்கு அமைவாக சம்மாந்துறை அபிவிருத்திக்கும் நலனுக்குமான பேரவை (SWDC) ஆனது சம்மாந்துறை சார்ந்த பகுதிகளில் உள்ள பரீட்சார்த்திகளை பரீட்சைக்கு சரியாக தயார் செய்வதற்கான முழு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. 

 இப் போட்டிப் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளை தயார் செய்வதில் கைதேர்ந்த, முன்னர் நடைபெற்ற பரீட்சைகளில் கற்பித்து அனுபவம் உள்ள, பல மாணவர்கள் சித்தியடைவதற்கு வழி காட்டிய விரிவுரையாளர்களைக் கொண்டு மீட்டல் பயிட்சி வகுப்புக்கள் நடார்த்த உத்தேசித்துள்ளது. 

நீங்களும் இம்முறை பரீட்சையில் தோற்ற விண்ணப்பித்து எமது வழிகாட்டல் மீட்டல் விரிவுரை வகுப்பில் இனைந்து கொள்ள விரும்பினால் 

கீழ்உள்ள விண்ணப்படிவத்தில் நிரப்பி அனுப்புங்கள். 
உங்கள் நண்பர்களுக்கும் இதனை Share செய்து தகவல்களை பெற்றுகொள்ள உதவுங்கள்.

https://forms.gle/zwMzRcocXTrfCco46

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.