க.பொ.த (சா/த) பரீட்சை - 2022 (2023) பரீட்சை இறுதி தினத்தன்று பொலிஸ் பாதுகாப்பினை வழங்குதல் தொடர்பாக பரீட்சை ஆணையாளர் பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் பிரதம அலுவலகத்திற்கு!!

க.பொ.த (சா/த) பரீட்சை - 2022 (2023) பரீட்சை நாடு முழுவதும் 3558 மத்திய நிலையங்களில் நடைபெறுவதோடு சகல பரீட்சை நடவடிக்கைகளும் 2023 ஜூன் மாதம் 08 திகதி வியாழக்கிழமையன்று 11.40 மணிக்கு நிறைவுபெறுகின்றது. பரீட்சை நடைபெறுகின்ற காலப்பகுதியில் மாணவர்களிடையே சிறிய கைகலப்பு நிகழ்வுகள் இடம்பெறுகின்றமையோடு பரீட்சை இறுதி தினத்தன்று பல்வேறு பிரதேசங்களில் மாணவர்களுக்கிடையில் இவ்வாறு வெளிநபர்கள் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு தயாராகவுள்ளனர் என்ற தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எனவே அன்றைய தினத்தன்று சகல பரீட்சை மத்திய நிலையங்களுக்கும், குறிப்பாக நகர்ப்புற மத்திய நிலையங்களுக்கு விசேட பொலிஸ் நடமாடும் சேவையினை (Police Mobile Service) வழங்கி மாணவர்களதும், வெளிநபர்களதும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நிலைமையினைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த தேசிய வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்ற தற்பொழுதுவரை தாங்கள் வழங்குகின்ற ஒத்துழைப்பினை மனமுவர்ந்து பாராட்டுவதோடு. இவ்வேளையில் நடைபெறுகின்ற பரீட்சை நடவடிக்கைகளுக்கு தங்களது ஒத்துழைப்பினை மேலும் வழங்குவீர்கள் என்றும் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.

H.J.M.C.அமித் ஜயசுந்தர
பரீட்சை ஆணையாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.