தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு (2023) ஜூலை 6 ஆம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை (2023) ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு அரச அல்லது அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்திபெறும் மாணவர்கள் ஜனவரி 2024 முதல் புலமைப்பரிசில்களைப் பெறத் தகுதி பெறுவார்கள். இருப்பினும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் 2024 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் 11 வயதுக்குக் குறைவான மாணவர்கள் மட்டுமே உதவித்தொகையைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.