தமிழ்மகன் அவார்ட்ஸ் 2023 கடந்த வியாழக்கிழமை (08) QNCC அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் இந்திய கலை, அறிவியல், இலக்கியம், வணிகம், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் சாதித்து நமது தாய்நாட்டிற்கும், நாம் வாழும் கத்தார் மண்ணுக்கும் பெருமை சேர்த்தவர்களுக்கு விருது வழங்கும் கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் மணிகண்டன்,தமிழ் மற்றும் மலையாள திரைபடங்களில் நடித்த நடிகர் குரு சோமசுந்தரம், கோப்ரா திரைப்படத் நடித்த நடிகை மீனாட்சி, அயோதி திரைப்பட இயக்குனர் மூர்த்தி, இயக்குனர் விருமாண்டி, பிக்பாஸ் சீசன் 6 புகழ் நடிகர் விக்ரமன், பிக்பாஸ் புகழ் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் நடிகர் ராஜு, நகைச்சுவை நடிகர் Prankster ராகுல் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும்,
சாதனைத் தமிழன், நம்பிக்கை தமிழன், மனிதநேய சுடர், மகா குரு, அக்கினி சிறகு, கனவு நாயகன் கலாம், வாழ்நாள் சாதனையாளர், நற்றமிழ் நாயகர், Business Icon, Rising Leader, Culture Ambassador, Dream Builder, Health & Wellness Icon, Economic Empowerment என
14 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
ஜே.எம்.பாஸித்
கருத்துகள்
கருத்துரையிடுக