3 நாட்கள் கடந்த பின்னரும்கூட அடையாளம் காணப்படாமல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள 187 உடல்கள்




ஒடிஷா ரயில் விபத்து இந்தியாவை உலுக்கியது மட்டுமின்றி, உலகம் முழுவதுமே துயரத்தை படரவிட்டிருக்கிறது. 3 நாட்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட இன்னும் 187 உடல்கள் அடையாளம் காணப்படாமல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.


வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணியளவில் ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே பஹானகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே விபத்து நேரிட்டது. 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்டன. அந்த இரண்டு பயணிகள் ரயில்களிலும் சுமார் 2 ஆயிரம் பேர் பயணித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.



3 ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 288 பேர் பலியானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சில உடல்கள் மீண்டும் மீண்டும் கணக்கில் கொள்ளப்பட்டதை கண்டறிந்து, அந்த எண்ணிக்கை 275 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்த 747 பேர் புவனேஷ்வர், பாலசோர் உள்ளிட்ட நகரங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.