8 வயது சிறுமியால் டெலிவரி பாய்க்கு நேர்ந்த கொடூரம்!
 
இந்தியாவில் கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் உள்ள இலக்ட்ரோனிக்ஸ் சிட்டி பகுதியில் அடிக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு உணவு விநியோகிக்க சென்ற நபர் அங்கிருந்தவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த உணவு விநியோக வாலிபர் தன்னை மொட்டைமாடிக்கு அழைத்துக் சென்றதாகவும், தான் அவரது கையை கடித்துவிட்டு தப்பித்தேன் என பெற்றோரிடம் 8 வயது சிறுமி ஒருவர் கூறியுள்ளார்.
உடனே, அவரது பெற்றோர் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் உணவு விநியோக வாலிபரை நைய புடைத்துள்ளது பயங்கரமாக தாக்கியுள்ளார். பின்னர் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறித்து குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டனர்,
இந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. பொலிஸ் சிசிரிவி-யை பரிசோதனை செய்து பார்த்தபோது, அந்த சிறுமி தனியாகத்தான் மொட்டைமாடி சென்று தெரியவந்துள்ளது.
உணவு விநியோக வாலிபர் அந்த சிறுமியை அழைத்துச்செல்லவில்லை. இதனால் அந்த சிறுமி வேண்டுமென்றே பொய் சொல்லியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.
ஏன் பொய் சொன்னாய்? என அந்த சிறுமியிடம் கேட்டபோது, படிக்கும் நேரத்தில் விளையாடியது தெரிந்தால் பெற்றோர்கள் அடிப்பார்கள் என்பதால், அவர்களுக்கு பயந்து பொய் சொன்னதாக தெரிவித்தார்.
பின்னர் தனது மகள் சொல்வது உண்மை என நம்பி தவறுதலாக முறைப்பாடு அளித்துவிட்டோம் என சிறுமியின் பெற்றோர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இது தொடர்பில் அந்த உணவு விநியோக வாலிபர் கூறுகையில்,
”சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ளவர்கள் காவலாளிகளுடன் சேர்ந்து என்னை தாக்கினார்கள்.
சிசிரிவி கெமராவை ஆய்வு செய்த பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிசிரிவி என்னை பாதுகாத்துள்ளது. சிசிரிவி கெமரா இல்லையென்றால் என்ன செய்வது? என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கவலை” என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.