அந்தந்த துறைசார்ந்தோர்க்கு தான் சார்ந்த துறையில் நிலைத்து  நிற்க சந்தர்ப்பங்களைத் தேடிப்போக வேண்டிய சூழல் ஏற்படுவதுண்டு.
     விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு சந்தர்ப்பங்கள் அவர்களை தேடிப்போவதும் உண்டு.
     அவ்வாறான  பல சந்தர்ப்பங்கள் ஒருவரைத் தேடிப்போன அந்த வரம் உலக அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத் அவர்களுக்கு சொந்தமாகியிருக்கின்றன.
      
அவ்வாறு தன்னைத் தேடி வந்த  சந்தர்ப்பங்களை வல்லோன் தனக்கு வழங்கியுள்ள  தனித்துவமான  அனுபவங்களையும்
திறமைகளையும் கொண்டு அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன் படுத்திக் கொண்ட அவரது ஆளுமையே  6 தசாப்தங்கள் தாண்டியும் அவரை தான் சார்ந்த ஒலிபரப்புத்துறையில் உலக அரங்கிலேயே இன்றும் ஜொலிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மூத்த ஒலிபரப்பு சாதனையாளர்கள் கூட  தூய மன உணர்வோடு இவரை  அண்ணாந்துப் பார்த்து மகிழும் அளவுக்கு ஒரு சிறப்பு இவரிடம் இருக்கிறது. 

யாரோடும் எந்த பகைமையும் இவர் காட்டியதோ, இவரோடு யாரும் எந்த பகைமையையும் காட்டியதாகவோ எந்த செய்தியையும்  யாருமே கேட்டிருக்கமுடியாது! 

   கடந்த 06 தசாப்தங்களில் இலங்கை ஒலிபரப்பு வரலாறு, பல ஒலிபரப்பு ஜாம்பவான்களின் நூல்களைக் கண்டுள்ளது. 

    திரு.சோ.சிவபாதசுந்தரம் அவர்களின் ஒலிபரப்புக் கலை தொட்டு  இறுதியாக திரு வீ.என்.மதியழகன் அவர்கள் எழுதிய 'வீ.என்.மதியழகன் சொல்லும் செய்திகள்' வரை சுமார் 15 நூல்கள் வெளிவந்துள்ளன. 

      அன்பு உலக அறிவிப்பாளர் பீ‌.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" 
எனும் நூலில் தனது வாழ்வியல் அனுபவங்களோடு நமது ஒலிபரப்பு வரலாறு, தமக்கு வழிகாட்டிகளாகயிருந்த மூத்தவர்களைப்பற்றிய தகவல்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களை சிறப்பாக பதிவு செய்து  ஆவணப்படுத்தி  இந்நூலுக்கு   சிறப்பு செய்து வெற்றி கொண்டுள்ளார்.

     இந்நூலின் அறிமுக விழா "வெண்பா நூல் மனை"யின் ஒருங்கிணைப்பில்  நாளை சனிக்கிழமை  நோன்மதி தினம் 03ஆம் திகதி மாலை 3 மணிக்கு, கொழும்பு 07, ரூபவாஹினி, அரச திரைப்படக்கூட்டுத்தாபனத்துக்கு அண்மையில் உள்ள Prof.Stanley  Wijesundera Mawatha யில் அமைந்துள்ள அழகியற்கற்கை அரங்கில் நடைபெறுகிறது. 

விழாவிற்கு அன்போடு எல்லோரும் அழைக்கப்படுகிறார்கள்.
      
கொழும்பு 07. Prof.Stanley Wijesundera Mawatha, அழகியற்கற்கை அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

பேரன்புடன்,
எம்.எஸ்.எம். ஜின்னா.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.