அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!
பிள்ளைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என சிறுவர் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தெடர்பில் மேலும் கூறுகையில்,“டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகின்றது.
இந்த வைரஸ் தொற்று தற்போது பாடசாலைகள், தனியார் வகுப்புகளில் அதிகம் பரவி வருகின்றது. இதனால் அதிக காய்ச்சல், தலைவலி, சுவாசப் மற்றும் இருமல் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்படலாம்.
எனவே, தமது பிள்ளைகளுக்கு இவ்வாறான அறிகுறிகள் இருப்பின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது. அத்துடன் பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.”என கூறியுள்ளார்.
இதேவேளை, சிறுவர்களிடையே மர்ம காய்ச்சல் வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக