தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு வரும் உள்ளங்கையை விட சிறிய அளவில் குர்ஆன்!
 
அல்பேனியாவின் தலைநகரான திரானாவை சேர்ந்த ப்ருஷி குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்த கையடக்க குர்ஆனை பாதுகாத்து வருகிறது.
19ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட இந்த குர்ஆன், 2 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது.
இந்த குர்ஆனில் 900 பக்கங்கள் வரையுள்ளன.
குர்ஆனை, கடவுள் அளித்த புனித புத்தகமாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
ப்ருஷி குடும்பம், இந்த குர்ஆனை வெள்ளிப்பேழையில் வைத்து பாதுகாத்து வருகிறது.
இதனுள் படிப்பதற்கு வசதியாக ஒரு பூதக்கண்ணாடியும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்திற்கு தங்க நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெல்வெட் அட்டை போடப்பட்டுள்ளது.
மேலும் இதன் பக்கங்கள் கிழியாமல் அதிக ஆண்டுகள் நீடித்து இருக்கும் வகையில் புத்தகத்தின் முனைகள் மெல்லிய தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.