அனைத்து பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணிக்கு தடையுத்தரவு


இன்று கொழும்பில் நடத்தப்படவுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு மற்றும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையங்களின் கோரிக்கைக்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் வரை நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.