நடிகை ப்ரீத்தி – நடிகர் கிஷோர் இரகசிய திருமணம்!
 


கடந்த 2009ம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர்.
முதல் படத்திலேயே அதிகமாக ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பிறகு கோலிசோடா, வஜ்ரம், நெடுஞ்சாலை, சகா, ஹவுஸ் ஓனர் என பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் தான் தன்னை விட 4 வயது பெரியவரான சீரியல் நடிகை ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்திருந்தார். இருவரும் அண்மையில் ஒரு பேட்டியில் பேசும்போது, எல்லோரும் சீக்கிரம் திருமணம் செய்துகொண்டோம் என்கிறார்கள்.
ப்ரீத்தியின் அப்பா 4 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவர் தனது மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதனாலேயே தான் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டியதானது.
இல்லை என்றால் என்னுடைய 31 வயதிற்கு மேல் தான் ப்ரீத்தியை திருமணம் செய்திருப்பேன் என கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.