அரச குடும்ப தற்கொலை செய்தி – அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!
 


பிரித்தானிய ஊடகம் ஒன்று தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் இளவரசர் ஹரி.
இந்நிலையில், ஹரியின் காதலியாக இருந்த கரோலின் ஃப்லாக் என்பவருக்கு தொல்லைகொடுத்த புகைப்படக்காரர்கள், தன்னையும் விடவில்லை என்று கூறியுள்ளார் கரோலினுடைய தாய்.
இளவரசர் ஹரி 2009ஆம் ஆண்டு காதலித்த பெண் கரோலின் ஃப்லாக். ஹரி கரோலினை காதலிக்கும் விடயம் ஊடகங்களில் வெளியானதும், கரோலினுடிய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு, என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத் துவங்கிவிட்டார்களாம்.
இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக கரோலினுடைய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து, பிரிவதென முடிவு செய்து இருவரும் பிரிந்துள்ளார்கள்.
பின்னர் லூயிஸ் பர்ட்டன் என்ற நபரை காதலித்த கரோலின், அவரைத் தாக்கியதாக வழக்குத் தொடரப்பட்டது. தான் தன் காதலரைத் தாக்கவில்லை என்று அவர் கூறியும் அவர் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார் கரோலின். அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
கரோலின் கைது செய்யப்பட்டபோதும், அவர் உயிரிழந்தபிறகும், எங்கு சென்றாலும், தன்னையும் புகைப்படக்கார்கள் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார் கரோலினுடைய தாயாகிய கிறிஸ்டைன் ஃப்லாக்.
தற்போது இளவரசர் ஹரி தி மிரர் ஊடகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதை அறிந்த கிறிஸ்டைன், ஊடகங்கள் செய்வது மோசமான செயல். ஆகவே, ஹரி ஊடகங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ள விடயம் எனக்கு மிகவும் ஆறுதலை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
ஹரி இதை அனைவருக்காகவும் செய்கிறார் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ள கிறிஸ்டைன், அவர் மிகவும் துணிச்சலானவர். என் மகளும் அவரைப்போலவே கஷ்டப்பட்டார்.
தன்னைக் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகும்போதெல்லாம், தன் குடும்பத்தினர் அல்லது நண்பர்களில் யாரோ அதை ஊடகங்களுக்குக் கொடுத்திருக்கக்கூடும் என்ற மன நிலை ஹரியைப் போலவே அவருக்கும் இருந்தது என்கிறார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.