இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள்!
 


தென்கொரியாவில் இடம்பெற்று வரும் ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் தருஷி கருணாரத்ன மேலும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் இன்று இடம்பெற்ற 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
தருஷி கருணாரத்ன நேற்று (04) இடம்பெற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வெற்றிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தென்கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் முப்பாச்சல் போட்டியில் இலங்கை வீரர் மலித் யசிரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இப்போட்டியில் ஜப்பானின் மியாவோ மனாடோ தங்கப் பதக்கத்தையும், சீனாவை சேர்ந்த மா யிங்லாங் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.