கசிப்பு காய்ச்சி விற்ற ஆங்கில பாட ஆசிரியர் கைது!
தீ மூட்டிய மனைவி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணியாற்றுகின்றார் ! 

பிபிலை ரிதிமாலிய பகுதியில் உள்ள பாடசாலை​யொன்றில் கடமையாற்றும் ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் ரிதிமாலிய பகுதியில் கசிப்பை காய்ச்சி அதனை விற்பனைச் செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, வடிக்கட்டிய 5,000 லீற்றர் கசிப்புடன் அந்த ஆசிரியரின் சகோதரர் கைது செய்யப்பட்டதோடு அந்த பிரதேச பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியருடைய மனைவி எச்ச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.