நுவரெலியாவில் புதிய சமூர்த்தி பயனாளிகள் தெரிவில் முறைகேடு பொதுமக்கள் பிரதேச செயலகம் முன் திரண்டு போராட்டம்

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்துள்ள  "அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்களை தெரிவு செய்வதில் பொது  மக்கள் அதிகம்  புரக்கணிக்கப்பட்டுள்ளார்கள் புதிதாக சமூர்த்தி  பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டத்தில் பாரிய  முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது எனவும் உண்மையாகவே வறுமையானவா்கள் புதிய பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்து  போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட மற்றும் உள்வாங்கப்படாத பயனாளிகள் ஒன்றினைந்து ( 26 ) திங்கட்கிழமை நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நுவரெலியா பிரதேச செயலகத்தினால் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு ஏற்ப பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது இதனை அவதானித்து சமூர்த்தி கொடுப்பனவு பட்டியலிலும் தங்கள் பெயர் நீக்கப்பட்டமை தங்களை மீண்டும்  வறுமையில் தள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ,  எனவும் பாதிக்கப்பட்டவர்கள்தெரிவித்து  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த மழைக்கு மத்தியில் நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி நுவரெலியா எலிசபெத் மகாராணி வீதி, லோசன் வீதி,  வழியாக நுவரெலியா பிரதான தபாலகம் முன் நின்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷமிட்டுடவாறு சுமார் இரண்டு  மணித்தியாலம் போராட்டத்தில்  ஈடுபட்ட போராட்டகார்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது .

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.