பணவீக்கம் மேலும் வீழ்ச்சி


2023 மே மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 33.6% ஆக பதிவாகிய இலங்கையின் பணவீக்கம் 2023 ஆண்டு மே மாதத்தில் 22.1% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக இருந்த உணவு வகை ஆண்டு பணவீக்கம் (புள்ளி) 2023 ஆண்டு மே மாதத்தில் 15.8% ஆக குறைந்துள்ளது.

மேலும், ஏப்ரல் மாதத்தில் 39.0% ஆக இருந்த உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளி) மே மாதத்தில் 27.6% ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.

உணவு வகையைப் பொறுத்த வரையில், புதிய மீன், காய்கறிகள், சீனி, கோழி இறைச்சி, மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், கருவாடு மற்றும் டின் மீன் போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

புதிய பழங்கள், பால் மா, அரிசி, தேங்காய், மிளகாய் துாள், தேங்காய் எண்ணெய், சாதாரண பாண், முட்டை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மஞ்சள், கௌபி மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.