உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் பெற்றுள்ளார்.

மே 31ம் திகதி பெர்னார்ட் LVMH பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.கடந்த 2022 டிசம்பரில் உலக பணக்காரர்கள் பட்டியலில் மஸ்கை முந்தினார் பெர்னார்ட் அர்னால்ட். அப்போது டெஸ்லா நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மஸ்க், ட்விட்டர் தளத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கி இருந்தார்.
அந்த நிறுவனத்தில் அவரது முழு கவனமும் இருந்து வருகிறது. அதனால் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் கவலை கொண்டனர்.

அதன் விளைவாக பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது. இருந்தும் நடப்பு ஆண்டில் டெஸ்லா பங்குகளின் விலை ஏற்றம் கண்டது.
மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நியூராலிங்க் போன்ற நிறுவனங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.