ஆரையம்பதியில் வங்கிக்கொள்ளை முயற்சி - அதிகாலையில் சம்பவம்

ஆரையம்பதியில் உள்ள இலங்கை வங்கிக்கிளை பணத்தை திருடர்கள் கொள்ளையிட முயற்சித்த சம்பவமொன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இரும்பு உபகரணங்கள் , அலவாங்குகள் கொண்டு வங்கியின் கதவை திருடர்கள் உடைத்தபோதும் , அங்கு பொருத்தப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை ஒலிச் சத்தம் காரணமாக அக்கம் பக்க மக்கள் திரண்டதால் தப்பியோடியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.