சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம்

சாய்ந்தமருதில் மாபெரும் இரத்ததான முகாம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக சாய்ந்தமருதில்  "உதிரம் கொடுத்து உயிர்காப்போம்" எனும் தொனிப்பொருளில் யுஎஸ்எப் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் (10) சனிக்கிழமை காலை 8.30 முதல் மாலை 3 வரை  சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையம் (SLYC) இடம்பெறும். 

“ எவரொருவர் ஒரு மனிதனை வாழ வைக்கின்றாரோ அவர் யாவரையும் வாழ வைத்தவர் ஆவார்”
என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இதில் கலந்து கொண்டு இரத்தானங்களை வழங்க முன்வருமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆண், பெண் இருபாலாருக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் வாகன வசதி இல்லாதவருக்கு வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களை
அ.க. அன்வர்- 0776655606, எ.எம்.சஹான்-0752515453, ஏ.ஆர்.எம்.ஜப்ரான்-0757788902, எம்.எம்.றக்ஸான்- 0767000661 அழைத்து பெற்றுக்கொள்ளலாம்.

பதிவுகளுக்கு கீழுள்ள லிங்கினை அழுத்தி உங்களது வரவினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6HhkkJfMQ5Y8EheSFiI9otk3uUhVAU_ghyt9o1u_cm0zv2Q/viewform?vc=0&c=0&w=1&flr=0

கருத்துகள்