ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இடம்பெறாது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

குறித்த தினத்துக்கு முன் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது. அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்தின் பின்பே ஜனாதிபதித் தேர்தல். ஆனால், அந்தத் தேர்தலை இலக்கு வைத்து இப்போதே அடிப்படை வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று அரச தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

அதற்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் அரசு நடத்த வேண்டும். ஆனால், அரசு தேர்தலை நடத்துவதற்குப் பணமில்லை என்று கூறி உள்ளூராட்சி சபைத் தேர்தலை காலவரையறை இன்றி ஒத்திப்போட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு இல்லை. எப்படியும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இடம்பெறாது என்பது தெளிவாகின்றது. - என்றுள்ளது.


 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.