சிறுவனை தேடி கண்டுபிடித்த மாலிங்க!
 
சிறுவன் ஒருவாின் பந்துவீச்சு பாணி தொடா்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தினேத் அனுஹஸ் என்ற குறித்த சிறுவன் வீரவில, குடாகம்மான பகுதியை சோ்ந்தவா் என தொியவந்துள்ளது.
அதனை அடுத்து இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, அண்மையில் பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வௌியிட்டு, அந்த சிறுவனை கண்டறிய உதவுமாறு கோாியிருந்தாா்.
பின்னா் லசித் மாலிங்க குறித்த சிறுவனுடன் தொடா்பு கொண்டுள்ளாா்.
இந்நிலையில் தினேத் அனுஹஸ் பந்து வீசும் பாணி சிறப்பாக உள்ளமை காரணமாக அவரை தேடியதாக லசித் மாலிங்க மேலும் ஒரு வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளாா்.
இதன் காரணமாகவே குறித்த சிறுவன் தொடா்பில் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாக லசித் மாலிங்க அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.