கால்வாயில் கலக்கும் பல்கலைக்கழக விடுதியின் மலக் கழிவு

TestingRikas
By -
0
கால்வாயில் கலக்கும் பல்கலைக்கழக விடுதியின் மலக் கழிவு


ஹோமாகம மஹேனவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்திற்கு சொந்தமான மாணவர் விடுதியின் கழிவுநீர் அமைப்பு செயற்படாததால் பல சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த கழிவுகள், கால்வாய்களில் கலப்பதால் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த இந்த மாணவர் விடுதியில் சுமார் 1,500 மாணவர்கள் தங்கியுள்ளனர்.

ஆனால், சில நாட்களாக, விடுதியின் மலக் கழிவுநீர் கால்வாய் செயல்படாததால், அப்பகுதி கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இக்கால்வாய்கள் மூலம் அப்பகுதியில் உள்ள சுமாா் 20 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நீா் விநியோகமாவதுடன், அதில் மலக்கழிவுகள் கலப்பதால் விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

இது குறித்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் விசாரித்து, அதற்கான தீர்வுகளை வழங்கியும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான தரப்பினா் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், தங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)