விமான நிலையத்தை பரபரபாக்கிய சீனர்
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த போது பிடிபட்ட சீனர் மீண்டும் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இதன் போது மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாது எனக் கூறி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மிக மோசமாக அந்த நபர் நடந்துக் கொண்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் குடிவரவுத் திணைக்கள அதிகாரி ஒருவரின் பலத்த பாதுகாப்புடன் நேற்று மாலை 5 மணியளவில் சீனப் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
விமானத்தில் ஏறுவதற்காக இந்தச் சீனர் கடைசி வாயிலுக்குக் கொண்டு வரப்பட்ட போது, சீனாவுக்குத் திரும்பிச் செல்ல முடியாது எனக் கூறி வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததாக விமான நிலைய வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சீனர்களை பாதுகாக்க வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த பிரயத்தனம் செய்து அவரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL884 விமானத்தில் ஏற்றி சீனாவுக்கு கொண்டு சென்றதாக விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சீன நாட்டவரின் பாதுகாப்பிற்காக மூன்று பொலிஸ் அதிகாரிகளும் குடிவரவு அதிகாரியும் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக