இராஜாங்க அமைச்சர்கள் இருவருக்கு புதிய பதவி
பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் பதில் பாதுகாப்பு அமைச்சரின் பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக