மக்களுக்கு வரிச்சலுகைகளை எவ்வாறு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது

⏩ மக்களுக்கு வரிச்சலுகைகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாக தற்பொழுது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது...
⏩ வியாபாரிகள் தங்களுக்கும் இலாபத்தை வைத்து கொண்டு மக்களுக்கும் சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
⏩ மக்களின் ஆதரவின்றி அரசாங்கத்தால் மட்டும் இவற்றைச் செய்ய முடியாது...
⏩ சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தடுப்பதற்கும், நாட்டை அராஜகமாக்குவதற்கும் சில அரசியல் செயற்பாடுகள் செயல்படுகின்றன.
⏩ தேசிய தேர்தலுக்கு மொட்டு தயார். . . 
- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மக்களுக்கு வரிச்சலுகையை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் தங்களுக்கும் இலாபத்தை வைத்து கொண்டு மக்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அது தொடர்பாக தற்போதுள்ள நடைமுறை பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று (11) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையப் புறப்படும் முனையத்தில் விமானப் பயணிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான சோ சிலோன் ஓய்வறை வசதி மற்றும் உணவகத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது:

கேள்வி - இந்த நாட்டின் தற்போதைய முன்னேற்றம் எவ்வாறு உள்ளது?

பதில் - ஒரு வருடத்திற்கு முன்பிருந்த நிலைமையும் 12 மாதங்கள் கடந்த பின்னரும் மக்கள் தற்போதைய நிலைமை குறித்து நேர்மறையாக சிந்திக்க முடிந்துள்ளது. அந்த தியாகத்தை மக்கள்
செய்தார்கள். மக்களின் ஆதரவின்றி இதை ஒரு அரசால் மட்டும் செய்ய முடியாது. போராட்டகாரர்களால் ஏற்பட்ட அழிவுகள், நாட்டில் ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என ஒரு நாடாக நாம் எதிர்கொண்டதை நாம் அறிவோம்.

நாட்டை இன்று இருக்கும் நிலையில் மாற்ற மக்கள் பெரும் தியாகங்களை செய்துள்ளனர். இன்றும் சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்கும் முகமாக வீதிக்கு வந்து போராடி நாட்டை அராஜகமாக்குவதற்கு குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் செயற்பட்டு வருகின்றன. இன்று மக்கள் அதனை புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் அதனை ஆதரிக்க மாட்டார்கள்.

கேள்வி - இந்த முன்னேற்றத்தின் முடிவுகளை அரசாங்கம் பெற்றுள்ளதா?

பதில் - டொலர் பெறுமதி எப்படி உயர்ந்தது என்று பார்த்தோம். எரிபொருள் மற்றும் எரிவாயு கொண்டு வர முடியாமல் இருந்த நாடு இது. டொலர் கையிருப்பு இல்லாத போது இன்று டொலர்
எப்படி குறைகிறது என்று பாருங்கள். இவ்வாறாக பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இன்று
நமக்கு அது பெரிய விஷயமாகிவிட்டது.

கேள்வி - அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை.

பதில் - மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் செலவுகள் அதிகரித்துள்ளன. மாவின் விலையையும் அன்றைய டொலரின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இன்று இருந்தால் இன்னும் குறைவாகக் கொடுக்க முடியும். அவர்களுக்கும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்நாட்களில் இவர்களை எப்படி அரசாக அங்கீகரிப்பது, சலுகை கொடுப்பது, வரியில் இருந்து
கொஞ்சம் சலுகை கொடுப்பது எப்படி என்று ஆலோசித்து வருகின்றனர்.

கேள்வி - இறக்குமதி வரம்பை அரசாங்கம் நீக்கியுள்ளது. டொலர் மதிப்பும் குறைந்துள்ளது. ஆனால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. வியாபாரிகள் இதைச் செய்வதில்லை.

பதில் - வியாபாரிகளை குறை கூறாதீர்கள். அவர்கள் அனைவரும் கடினமான காலங்களை எதிர்கொண்டார்கள்;. ஆதலால் வர்த்தகர்கள் தங்களுக்கும் லாபத்தை வைத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பார்க்க வேண்டும். அதற்கு அரசு  தலையிட வேண்டும்.

கேள்வி - பொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும் அல்லது அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டாலும் அரச நிறுவனங்கள் அதனை கண்டு கொள்வதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பதில் - தேடி பார்க்கமால் இல்லை. சிற்சில நடைமுறைச் சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை தீர்க்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில், இரண்டு நாட்களில் தீர்வு காணக்கூடிய நிலை இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் விலைக் கட்டுப்பாட்டை வைத்து பொருட்களை குறைக்க முடியுமா? அது நடந்தால், பொருட்கள் இல்லாது போகும். பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அது போன்ற விஷயங்கள் நடக்கும். இது இரு தரப்பிலும்
சமநிலைப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

கேள்வி - தேர்தலை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்ணனி தேர்தல் ஆணையத்தின் முன் பிரச்சாரம் செய்து வருகிறது.
பதில் - அன்றைய தினம் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு ஜே.வி.பி.யை சேர்ந்த எத்தனை பேர் வந்திருந்தனர்? அவர்களின் வேட்பாளர்களில் பத்தில் ஒரு பங்கு பங்கேற்க முடியவில்லை. இன்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக வேலை செய்ய விரும்புகிறார்கள். மக்கள் அதை ஏற்கவில்லை. முன்பு இருந்த நிலை அவர்களுக்கு இல்லை. அதை அவர்களும் புரிந்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் தேசிய அளவில் தேர்தல் நடக்கும் என்று நினைக்கிறோம். எந்த தேர்தலுக்கும் மொட்டு தயார்.

கேள்வி - இந்த வருடம் தேர்தல் நடக்குமா?

பதில் - தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். அரசும் முடிவு செய்ய வேண்டும். மக்கள் தேர்தல் கேட்கவில்லை. அவர்களுக்கு தேவை பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு வழி. அதனை இப்போது செய்து வருகின்றோம். நாடு உறுதியான நிலைப்பாட்டில் இருக்கும்போது தேர்தலை நடத்தலாம்.

கேள்வி - தேர்தலில் செலவு செய்ய நாட்டில் பணம் உள்ளதா?

பதில் - அதை நிதியமைச்சே கூற வேண்டும். ஆனால் ஒரு அரசியல் கட்சியாக, எந்த தேர்தலுக்கும் முகம் கொடுக்க அமைப்புக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கேள்வி - புதிய ஊடகச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மசோதாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

பதில் - பத்திரிகை சுதந்திரம் உண்மையில் கருத்தில் கொள்ளப்படுகிறது. மக்கள் தங்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அந்தச் சுதந்திரத்தை கட்டுபாடற்று பயன்படுத்துவது தவறு. அதில் பாதிக்கப்பட்ட மனிதன் நான். ஊடக நிறுவனங்கள் கூட எதையாவது வெளியிட்டால் பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் அதனை செய்த பிறகு மன்னிப்பு கேட்டு பின்னர் மறுநாள் அதை சிறிய எழுத்துக்களில் போடுவது அல்ல செய்யப்பட வேண்டியது.
நாட்டை குழப்புவது நல்லதல்ல. போராட்டத்தின் போது ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டன என்று பார்த்தோம். இது எங்களை விட உங்களுக்கு நன்றாக தெரியும். வெளியிடப்படும் ஒவ்வொன்றுக்கும் மக்கள் கொதித்தெழுந்தனர். மக்களை கோபப்படுத்தும் வகையில் சிலர் கூறிய
கருத்துகளை சமூக ஊடகங்கள் எப்படி செய்தன. அதைச் செய்தவர்களுக்கென்று சட்டம் இருக்க
வேண்டும். ஒழுங்குமுறை இருக்க வேண்டும்.



கேள்வி - கொண்டுவரப்படும் மசோதா மிகவும் கடுமையான மசோதா என்று கூறப்படுகிறது.

பதில் - அது ஒவ்வொருவரும் சொல்லும் கதைகள். ஒரு விவாதத்திற்கு கூட அந்த வரைவை யாராவது பார்த்தது உண்டா? இது குறித்து விவாதிக்கப்படும். அது பற்றி விவாதிக்கப்பட வேண்டும், சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், சட்டம் தேவைப்படுகிற இடங்களில் செயல்படுத்தப்பட வேண்டும், ஊடகங்களுக்கு தேவையான சுதந்திரம் வழங்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


கேள்வி : இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பதில் – எதிர்க்கட்சித் தலைவர் எல்லாவற்றையும் எதிர்ப்பது மட்டுமல்ல. ஊடகங்கள் சொல்வது போல் தலை குனிபவர். ஊடகங்களுக்கு பயப்படுகிறார். அவர் ஆட்சிக்கு வர வேண்டுமெனில் ஊடகங்களை ஆதரிக்க விரும்புகிறார். நல்லாட்சி காலத்தில் ஊடகங்களுக்கு எதிராக அவர் எப்போதாவது அறிவித்துள்ளாரா? அவர்களுக்கு அது பற்றி நன்றாக தெரியும். அவை அவ்வளவு
முக்கியமானவை அல்ல. திரு.சஜித் பிரேமதாச யார் என்பது முழு நாட்டிற்கும் தெரியும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.