கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

  Fayasa Fasil
By -
0

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று(15.06.2023)ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக, 37 அரச பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் எனினும், எந்தவொரு பாடசாலையும் முழுமையாக மூடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசித சமரகோன் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின், 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.மேலும் இந்த பணிகள், நாடளாவிய ரீதியில் உள்ள, 39 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)