மது அருந்தி வன்முறையில் ஈடுபட்ட பிக்கு கைது


 ஊராபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அதிகளவு மது அருந்தி வன்முறையில் ஈடுபட்ட பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த பிக்குவிடம் பிக்கு அடையாள அட்டை இல்லை என அத்தனகல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இசை அரங்கில் குடிபோதையில் கடுமையாக நடந்து கொண்ட பிக்கு, அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். அதன்போது காவல்துறையினர் தலையிட்டு பிக்குவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது பிக்கு பல காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளார். மேலும் காவல்நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட அவர், காவல் நிலைய கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார்.எனினும், இசை மைதானத்தில் மூங்கில் நடும் போது தான் கைது செய்யப்பட்டதாக இந்த பிக்கு காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.