மன்சூர் , மணிவண்ணன் ஆகியோருக்கு புதிய நியமனம்!

உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த ஏ.மன்சூருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்க கிழக்கு மாகாண பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளரால் செய்யப்பட்ட அப்பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்கள் இருவருக்கும் இந்நியமனத்தை வழங்கியுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

அபு அலா 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.