உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை அகற்றி இலங்கை வைத்தியர்கள் உலக சாதனை


கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கடந்த ஜூன் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது, ஒருவருக்கு சிறுநீரகத்திற்கு அருகில் ஏற்பட்டிருந்த மிக நீளமானதும் மிகப்பெரியதுமான கல்லை அகற்றி வைத்தியர் குழு கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. 

இதுவே உலகளாவிய ரீதியில் சிறுநீரகத்தில் ஏற்பட்டிருந்த மிக விசாலமான கல் என்பதனால், அதனை அகற்றியமை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதியப்பட்டதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டது. 

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைமைத்துவ மருத்துவ நிபுணர் லெப்டினன்ட் கேர்ணல், வைத்தியர் கே.சுதர்ஷனின் தலைமையில் கேப்டன்  வைத்தியர் W.P.S.C பத்திரத்ன மற்றும் வைத்தியர் தமன்ஷா பிரேமதிலக உள்ளிட்ட வைத்திய குழாம் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளது. 

சத்திரசிகிச்சைக்கு  மயக்கவியல் நிபுணர்களான கேர்ணல் (டொக்டர்) U.A.L.D பெரேரவும் கேர்ணல் (டொக்டர்) C.S அபேசிங்கவும் உதவியதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை இராணுவத்தின் வைத்தியர்கள் கடந்த ஜூன் முதலாம் திகதி இராணுவ வைத்தியசாலையில் வைத்து அப்புறப்படுத்திய சிறுநீரகக் கல் 13.372 சென்டிமீட்டர் நீளமும் 801 கிராம் எடையும் கொண்டதாகும். 

கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இதற்கு முன்னர்  மிகப்பெரிய சிறுநீரகக் கல் அகற்றப்பட்ட சம்பவம் 2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவாகியுள்ளது.  அது 13 சென்டிமீட்டர் நீளமுடையதாகும். 

அதிக எடை கொண்ட சீறுநீரகக் கல் 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஒருவரின் உடலில் இருந்து அகற்றப்பட்டதுடன்,  அதன் எடை 620 கிராம் ஆகும். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.