போதைப்பொருள் ஒழிப்பு: நாடுதழுவிய சோதனை நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தடுப்பு சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் விசேட சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 255 கொலைகள் நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை 34 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சம்பவங்களும் அடங்கும். கடந்த ஆண்டு 60 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த வருடம் இடம்பெற்ற அதேயளவிலான கொலைகள் இந்த வருடமும் பதிவாகக் கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.