குழப்பத்தை ஏற்படுத்தி அரசைக் கவிழ்க்கும், நோக்கம் நிறைவேற நான் இடமளியேன்




மொட்டுக் கட்சிக்கும் தனக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று அண்மைக்காலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.



இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.



இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எனக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை. எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்வது போன்று இது மக்கள் ஆணை இல்லாத அரசு கிடையாது.




மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. ஜனாதிபதியும், பிரதமரும் மாறியிருக்கின்றார்களே அன்றி இந்த அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணை மாறவில்லை.



எனவே, இல்லாத ஒன்றை திரும்பத் திரும்ப மக்கள் மத்தியில் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தி அரசைக் கவிழ்க்கும் எதிர்க்கட்சிகளின் நோக்கம் நிறைவேற நான் இடமளியேன்.



இது தேர்தல் காலம் அல்ல. எனினும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு அரசு தயார். ஆனால், தேர்தல் எப்போது இடம்பெறும் என்று இப்போது சொல்ல முடியாது." என தெவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.