ஜனாதிபதி இலண்டன் – பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின் போது பரிஸ் கிளப் உறுப்பினர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடி தீர்வு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக பரிஸ் கிளப் முன்னர் அறிவித்திருந்தது.


இந்த விஜயத்தின் போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலண்டன் மற்றும் பிரான்ஸிற்கு கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.