யார் இந்த "கலைவாதி கலீல்?" 

சிறந்த ஒரு ஆசிரியரும் கலை இலக்கியவாதியுமான கலைவாதி கலீல் கடந்த 9ஆம் திகதி இவ்வுலகைவிட்டு பிரிந்து விட்டார்.

மன்னார் நகரைப் பிறப்பிடமாவும் பாணந்துறை எலுவில கிராமத்தில் வசித்தவருமான இவர் மாரடைப்பு ஏற்பட்டு சிறிது காலம் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார். கலைவாதி கலீல் என்றால் எவராலும் மறக்க முடியாத ஒருவராக அனைவருடனும் அன்பாகவும் நகைச்சுவையுடனும் பழகும் மனப்பாங்கு கொண்ட ஒரு சிறந்த மனிதராக அவர் காணப்பட்டார்.

இலங்கையின் இலக்கிய வரலாற்றிலே அசைக்க முடியாத ஓர் இடத்தை தக்கவைத்துள்ள எழுத்துத் துறையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த இவர் சிரேஸ்ட ஊடகவியலாளருமாக செயற்பட்டவர். பல்வேறுபட்ட  போட்டி நிகழ்வுகளில் தலைமை தாங்கி மத்தியஸ்தம் வகித்து நடுநிலையாக தனது கடமையை நிறைவேற்றிய ஒருவராக கலைவாதி கலீல் காணப்பட்டார்.

 

1943 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மன்னார் சோனகத் தெருவிலே ஒரு கலைக் குடும்பத்திலே இரட்டையராக பிறந்த இவரின் மற்றய சகோதரர் மக்கள் காதர் என்று அழைக்கப்பட்ட காதர் நானாவாகும் இவரும் ஒரு கலை ஆர்வம் கொண்டவர் அத்துடன் சிறந்த ஊடகவியலாளருமாகவும் பணியாற்றி கடந்த 2021 ஜூன் மாதம் 10ஆம் திகதி மன்னார் மூர்வீதியில் காலமானார். இரண்டையராக பிறந்த இவர்கள் ஒரே மாத்தில் ஒருநாள் வித்தியாசத்தில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரித்துக் குலாவிய சிறுபராயத்தையும்இ துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்தையும் தனது சொந்த மண்ணான மன்னாரிலேயே கழித்த கலீல் அவர்கள் தனது வாழ்க்கைக்கான ஜீவனோபாய வழியாக உலகிலே தலைசிறந்த தொழிலான ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுக்கின்றார்.

 

1972இ 73 காலப் பகுதியில் பலாலி ஆசிரியர் கலாசாலையில் சேர்ந்த இவர் அங்கு தனது தொழிலுக்கான மேலதிக பயிற்சிகளைப் பெற்று பயிற்றப்பட்ட சித்திர ஆசிரியராக வெளியேறினார். பலாலி ஆசிரியர் கலாசாலையில் கற்கும் போது கலையாற்றல் மிக்க பல நண்பர்களின் நட்பு இவருக்கு கிடைக்கப் பெற்றது இவரின் கலை வாழ்க்கையின் ஓர் திருப்புமுனையாகவே அது அமைந்தது எனலாம்.

 

மன்னாரில் உள்ள அல் அஸ்ஹர் கல்லூரியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஆசிரியராகக் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு முதல் 1990 ஆண்டு வரையில் கொழும்பு 12 ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.. சித்திரத்திலே கைதேர்ந்த இவர் சித்திரப் பாடத்தோடு நின்று விடாமல் தமிழ் பாடத்தையும் திறம்படக் கற்பித்து தமிழ் பேசும் நல்லுலகில் புலமை வாய்ந்த மாணாக்கர்களை உருவாக்கினார்.

 

1990 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரையில் அளுத்கமை ஆசிரியர் கலாசாலையில் உதவி அதிபராகவும்  2000 ஆண்டு முதல் 2005 ஆண்டு வரையில் அளுத்கமை ஆசிரியர் கலாசாலை கல்விக் கல்லூரியாக மாற்றம் பெற்ற போது அதன் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் உதவிப் பீடாதிபதியாகவும் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றார்.

1956 ஆம் ஆண்டிலே " மறைந்த இருள் " என்ற சிறுகதை மூலமாக எழுத்துத் துறையில் பிரவேசித்த கலைவாதி அவர்கள் தனது முதல் சிறுகதைத் தொகுப்பான " ஒரு வெள்ளி ரூபாய் " என்ற நூலை வெளியிட்டார். அத்தோடு நின்று விடாமல் பல்வேறு துறைசார்ந்த பத்து நூல்களையும் வெளியிட்டார். அதில் புகழ் பெற்ற கவிதைத் தொகுப்புக்களும் அடங்கும். "கருவறையிலிருந்து கல்லறைக்கு " என்ற புதுக்கவிதை தொகுப்பு பாலஸ்தீன மக்களின் துயரம் கூறும் " ஓ...பாலஸ்தீனமே" என்ற கவிதை நூலோடு  இவர் எழுதிய "என் வில்பத்து டயரி " என்ற நூலும் இதில் அடங்கும்.

 

அதைவிட வெவ்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட 25 மேற்பட்ட நூல்களின் பிரதம ஆசிரியராகவும் தொகுப்பாசிரியராகவும் இபணியாற்றியுள்ளார்.

முஸ்லிம் கலாச்சார ராஜாங்க அமைச்சராக இருந்த மர்ஹூம் ஏ. எச். எம் அஸ்வர் அவர்களின் சிந்தனையிலே உருவாக்கப் பட்ட " வாழ்வோரை வாழ்த்துவோம் " என்ற கலைஞர்களின் கௌரவிப்பு விழாவிலே "தாஜூல் உலூம் (பல்கலைவேந்தன்)

என்ற கௌரவிப்புப் பட்டம் இவருக்கு வழங்கப் பட்டது. அதனைத் தவிர கலாபூசணம்  கலைக் குரிசில் கலாகேசரி போன்ற கௌரவ பெயர்களும்  விருதுகளும் இவருக்கு வந்து சேர்ந்தன.

 

2016 ஆம் ஆண்டிலே உலகக் கவிஞர்கள் தினத்தையொட்டி தாமரைத் தடாகத்தில் இடம்பெற்ற பாராட்டு வைபவத்திலே இலங்கையின் புகழ் பூத்த முன்னணி கவிஞர்கள் ஐந்து பேரை தெரிவு செய்தது அதில் மூன்று சிங்கள மொழி கவிஞர்களும் இரண்டு தமிழ் மொழிக் கவிஞர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இதில்  கலைவாதியும் தேர்ந்தெடுக்கப் பட்டதோடு இவருக்கு " காவ்யாபிமானி " என்ற சிறப்புப் பட்டமும் வழங்கப் பட்டது. இந்த நிகழ்வு அந்த ஆண்டில் மாத்திரமே இடம்பெற்றது. எனவே "காவ்யாபிமானி " என்ற சிறப்புப் பட்டத்தை பெற்ற ஒரேயொரு முஸ்லிம் கவிஞர் இவரென்பது குறிப்பிடத் தக்க விடயமாகும். பல துறைகளிலும் ஆளுமையுள்ள கலைவாதி கலீல் அவர்கள் வானொலித் துறையிலும் ஈடுபட்டு அங்கும் பல அருமையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அந்த நிகழ்ச்சிகள் யாவும் அக்காலத்தில் ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளாக வலம் வந்தன.

 

அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நிகழ்ச்சிகளாக இலக்கிய மஞ்சரி சதுரச் சங்கமம் இலக்கியக் களஞ்சியம் நூல் உலா கதை கேளீர் போன்ற சுவாரசியமான நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இலங்கை ரூபவாஹினியில்இ அவர் நடாத்திய நேர்காணல் நிகழ்ச்சியான " பிறைக் கதம்பம் " அக்காலத்தில் வெகுவாகப் பேசப்பட்ட நிகழ்ச்சியாகும்.

 

இலங்கையில் நடக்கின்ற தமிழ் தின விழா மீலாத் விழா போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ஊடகக் கருத்தரங்குகளில் விரிவுரையாளராகவும்இ புத்தக வெளியீட்டு விழாக்களில் சிறந்த ஆய்வுரைகளை வழங்குபவராகவும். கலந்து தனது இலக்கிய பயணத்தைத் மேற்கொண்டிருந்தார்.  நாட்டின் எந்த பகுதியில் இருந்து இவரை எந்த விழாவுக்கு அழைத்தாலும் சரியான நேரத்துக்கு அந்த இடத்தில் போய் சேரக் கூடியவராக இருக்கின்றார். இவரின் வயதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவரின் நடவடிக்கைகள் யாவும் விசித்திரமானதாகவே இருக்கின்றது.

 யார் இந்த "கலைவாதி கலீல்?" 

 நவமணிப் பத்திரிகையிலே உதவி ஆசிரியராக கடமைபுரிந்த இவர் முகநூல் வட்டாரத்திலும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலே செயல் பட்டிருந்தார். திக்குவல்லை ஸப்வான் அவர்களோடு இணைந்து இவர் எழுதும் இரட்டைப் புலவர்கள் என்ற கவிச்சமர் நிகழ்ச்சி முகநூலில் முக்கியமாகப் பேசப் படக் கூடிய நிகழ்ச்சியாக மாறி முகநூல் நண்பர் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஏ.எஸ்.எம்.ஜாவித் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.