கிழக்கு மாகாண அமைச்சுக்களின் பதில் செயலாளர்கள் இன்று கடமையேற்பு!

 -

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த ஏ.மன்சூரும், கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக, உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணன் ஆகியோர் தங்களின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். 

கிழக்கு மாகாண அமைச்சுக்களில் நிலவி வந்த செயலாளர் பதவிகளுக்கு பதில் செயலாளர்களை நியமிப்பது தொடர்பில் பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அவர்களுக்கான இந்நியமனம் வழங்கப்பட்டது. 

அதற்கமைவாக, குறித்த அமைச்சுக்களுக்கு பதில் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஏ.மன்சூர் மற்றும் நாகராசா மணிவண்ணன் ஆகியோர்கள் தங்களின் கடமைகளை இன்று (19) காலை பொறுப்பேற்றுக்கொண்டனர். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாண ஆணையாளர்கள், மாகாண பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக கடமைப்பொறுப்பேற்ற உள்ளூராட்சி ஆணையாளர் நாகராசா மணிவண்ணனை அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் அவரை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.