.



மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுக்கூட்டமும் சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன கௌரவிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழு இணைப்பாளர் திரு.மனோகரன் தலைமையில் நேற்று 26.06.2023ம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு சத்ருகொண்டானில் அமைந்துள்ள சர்வோதய மாநாட்டு  மண்டபத்தில் இடம்பெற்றது. 

சர்வமதப் பிரார்த்தனையுடன் இன்றைய நிகழ்வுகள் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன அவர்கள் தேசிய சமாதான பேரவையில் இருந்து வேறு ஒரு நிறுவனத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்லும் அவரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன அவர்கள் 18 வருடங்களாக தேசிய சமாதான பேரவையுடன் இணைந்து நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நூற்றுக்கு மேற்பட்ட சிவில் அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 வருடங்களாக சமாதானப் பேரவையின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளார். அன்னாரின் சேவை நலன்களை பாராட்டி கௌரவிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கௌரவப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சமய தலைவர்களால்,அரச அலுவலர்கள் மற்றும் மாவட்ட சர்வ மத உறுப்பினர்களால் பொண்ணாடைகள் போற்றி நினைவு சின்னங்கள், அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து சமன் செனவிரத்ன அவர்களினால் சிறப்பு உரையும் நன்றி நவிலழுடன் கௌரவிப்பு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த சர்வ மத மதகுருக்கள், சர்வ மத அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அரச உத்தியோகத்தர்கள், சமூகமட்டக்குழுக்கள், பெண்கள் குழுக்கள், இளைஞர்கள் ஆகியவர்களுக்கிடையிலான கருத்துக்களை உள்வாங்கி எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் செயல் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல்கள் சமாதான பேரவையின் இணைப்பாளர் பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய அகில இலங்கை சமாதான பேரவை நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் நடைமுறைப்படுத்தி வரும் இனங்களுக்கிடையே ஒற்றுமை, பரஸ்பரம், புரிந்துணர்வு என்பவற்றை கட்டியெழுப்ப நாட்டில் 17 மாவட்டங்களில் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.