மின் கட்டண குறைப்பு யோசனை தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை - PUCSL

மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30) தீர்மானம் எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த யோசகைள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை குறைக்க மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது.

வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் 30 அலகுகள் வரையிலான மின் கட்டணத்தை 23 வீதமாகவும் உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை 29 முதல் 40 வீதமாகவும் குறைப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.